சென்னை | கொலை வழக்கில் சிக்கிய மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேவை

By KU BUREAU

சென்னை: சென்னை மாநில கல்லூரி​யில் படித்து வந்த திருத்​தணியை சேர்ந்த மாணவர் சுந்​தர், கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலை​யத்​தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்​களால் சரமாரியாக வெட்​டி கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் சந்துரு, ஈஸ்வர்,ஈஸ்வரன், யுவராஜ் ஆகிய 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​தனர்.

இந்த குற்​றச்​செயலுக்கு கடும் கண்டனம் தெரி​வித்த நீதிபதி, 4 மாணவர்​களுக்​கும் நிபந்தனை ஜாமீன் வழங்​கியதோடு, அரசு மருத்துவமனை விபத்து அவசர சிகிச்​சைப் பிரி​வில் தலா 2 பேர் 15 நாட்​களுக்கு சேவை​யாற்ற வேண்​டும் என்று உத்தர​விட்​டார். அதன்படி, இவர்கள் அவசர சிகிச்​சைப் பிரிவு​களில் நோயாளி​களின் மீது இருக்​கும் ரத்தத்தை துடைப்​பது, விபத்து ஏற்பட்டு ரத்த வெள்​ளத்​தில் ஆம்லென்ஸ்​களில் வருபவர்களை ஸ்ட்​ரெச்​சரில் கொண்டு செல்வது போன்ற சேவைகளை செய்து வருகின்​றனர்.

நீதி​மன்றம் வழங்கிய தண்டனையை பாராட்டிய சமூக ஆர்வலர்​கள், “அவசர சிகிச்​சை பிரிவுக்கு வருபவர்களை பார்க்​கும் மாணவர்களுக்கு, மற்றவர்களை கத்தி​யால் வெட்டுவது போன்ற குற்​றச்​செயல்​களில் ஈடுபடும் எண்ணம் வ​ராமல் இருக்​கும். மற்றவர்​களின் வலி​யும், கஷ்டங்​களும் புரி​யும்” என்று தெரிவிக்​கின்​றனர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE