சென்னையில் அதிர்ச்சி: தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 100 பவுன் நகை மாயம்

By KU BUREAU

சென்னை: ஆயிரம் விளக்கு, ரங்கூன் தெரு​வில் வசிப்​பவர் சூசைராஜ் (50). தனியார் நிறு​வனம் ஒன்றில் மேலா​ளராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 3-ம் தேதி திருச்​சி​யில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்ள குடும்பத்​துடன் சென்றார். முன்னதாக வீட்டுசாவியை கையோடு எடுத்​துச் சென்​றால் தவறவிட்டு விடு​வோம் என்ற எண்ணத்​தில், பக்கத்து வீட்டில் வசிக்​கும் ஒருவரிடம் கொடுத்து​விட்டு சென்​றுள்​ளார்.

இந்நிலை​யில், நேற்று காலை திரும்பி வந்த அவர், பக்கத்து வீட்​டில் கொடுத்​திருந்த சாவியை திரும்பப் பெற்று கதவைத் திறந்து உள்ளே சென்​றார். பின்னர் பீரோ​வில் இருந்த நகைகளை சரிபார்த்த​போது 100 பவுன் தங்கநகை மாயமாகி இருந்​தது. அதிர்ச்சி, அடைந்த சூசைராஜ் பக்கத்து வீட்டுக்​காரரிடம் சென்று விசா​ரித்​தார். அவர் தனக்​கும் நகை மாயமானதற்​கும் சம்பந்தம் இல்லை என தெரி​வித்​தார்.

இதைக் கேட்ட சூசைராஜ் நகை மாயமானது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலை​யத்​தில் புகார் தெரிவித்​தார். இதையடுத்து, போலீ​ஸார், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்​து சம்பவ இடத்தில் விசாரணை மேற்​கொண்டனர். அப்பகு​தி சிசிடிவி கேமரா காட்​சிகளை அடிப்​படையாக வைத்​தும் துப்பு துலக்​கப்​பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE