விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என விக்கிரவாண்டி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னலூர் விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் மகன் மேகநாதன் (30). இவர் கடந்த அக்டோபர் 27ம் தேதி விஜய் மாநாட்டிற்கு வந்தவர் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து மேகநாதன் தந்தை புஷ்பநாதன் விக்கிரவாண்டி போலீஸில் புகார் அளித்தார்.
அப்புகாரில் அவர் கூறியிருப்பது, கடந்த அக்டோபர் 27ம் தேதி காலை 8 மணிக்கு எங்கள் ஊரில் இருந்து பேருந்து மூலமாக விக்கிரவாண்டில் உள்ள வி.சாலையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எனது மகன் மேகநாதன் மற்றும் 34 நபர்கள் சென்றார்கள். அன்று மாநாட்டில் கலந்து கொண்டு வீ.சாலையில் இருந்து திரும்பி வரும்போது சுமார் 8.30 மணி அளவில் அவருடன் வந்த சந்தோஷ் என்பவரின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய போது மாநாட்டிற்கு அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருப்பதாக கூறினார்.
மீண்டும் தொலைபேசி தொடர்பு கொண்ட போது போன் எடுக்கவில்லை. அவர் விக்கிரவாண்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வீடு வந்து சேரவில்லை எங்கு தேடியும் மேகநாதன் கிடைக்கவில்லை, காணாமல் போன எனது மகனை கண்டுபிடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
» ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
» சென்னை | பைக்கில் லிப்ட் கேட்டு வழிப்பறி: சிறுவன் உட்பட 3 பேர் கைது