சென்னை: மயிலாப்பூர் விஎஸ்வி கோயில் தெருவை சேர்ந்தவர் சகுந்தலா (64). இவர் கடந்த 30-ம் தேதி தனது வீடு அருகே வந்து கொண்டிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரது 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.
புகாரின்பேரில், மயிலாப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது மதுரையை சேர்ந்த முகமது ஷேக் சிக்கந்தர் (24), திண்டுக்கல்லை சேர்ந்த பர்வேஸ் முஷ்ரப் (23). மேற்கு சைதாப்பேட்டை அருணாசலம் தெருவில் வசிக்கும் இருவரும் தனியார் வங்கி ஊழியர்கள் என்று தெரியவந்தது. 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.