சென்னை | மளிகை கடையில் திருடியவர் கைது

By KU BUREAU

சென்னை: வியாசர்​பாடி​யில் மளிகைக் கடையில் திருட்​டில் ஈடுபட்ட கொள்​ளையன் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை வியாசர்​பாடி, நியூ மெகஷின்​புரம் பகுதி​யில் வசிப்​பவர் மாரியப்​பன்​(62). இவர் அதே பகுதி இ.எச். சாலை​யில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 2-ம் காலை கடையைத் திறக்க வந்த​போது, பூட்டு உடைக்​கப்​பட்​டிருந்​தது.

மேலும், கல்லா பெட்​டியி​ல் இருந்த பணம், சிகரெட் பாக்​கெட்கள் திருடு போயிருந்தன. சரித்​திர ப​திவேடு குற்றவாளி அதிர்ச்சி அடைந்த மாரியப்​பன், இதுதொடர்பாக வியாசர்​பாடி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்டமாகசம்பவ இடத்​தில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்​தனர்.

இதில், மளிகைக் கடையில் திருட்​டில் ஈடுபட்டது எம்.கே.பி. நகரைச் சேர்ந்த சரவணன் என்ற பகா சரவணன்​(40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீ​ஸார் கைது செய்து நீதி​மன்றகாவலில் சிறை​யில் அடைத்​தனர். இவர் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்​குகள் உள்ளதும், வியாசர்​பாடி காவல் நிலைய சரித்​திரப்​ ப​திவேடு குற்​றவாளி பட்டியலில் உள்ளார் என்பதும் தெரிய​வந்​தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE