சென்னை: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் கொத்தவால்சாவடி போலீஸார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனையிட்டனர். அப்போது, அதில் உரிய ஆவணமின்றி (ஹவாலா) இருந்த ரூ.40 லட்சத்தை கைப்பற்றினர்.
விசாரணையில் அவரது பெயர் பவேஷ் என்பதும், சவுகார்பேட்டையில் வீட்டு உபயோகப் பொருள்கள் கடை நடத்தி வருவதும், நண்பர் ஒருவரிடம் அந்தப் பணத்தை கொடுப்பதற்காகக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அந்த பணத்தை வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.