மீஞ்சூர் அருகே மின்மாற்றி மீது வாகனம் உரசியதில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் உயிரிழப்பு

By இரா.நாகராஜன்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே மின்மாற்றி மீது வாகனம் உரசியதில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை, எருக்கஞ்சேரி- கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர், சென்னை - மூலக்கடை பகுதியில் உள்ள கோழி இறைச்சி மொத்த விற்பனையகம் ஒன்றில் வாகன ஓட்டுநராக பணிபுரிருந்து வந்தார். இந்நிலையில், இன்று பகலில் ராஜ், சரக்கு வாகனத்தில் மூலக்கடையில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு, மீஞ்சூர் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு- இந்திரா நகர் பகுதியில் வந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள மின் மாற்றி மீது சரக்கு வாகனம் உரசியது. அப்போது, மின்மாற்றியில் உள்ள மின் கம்பிகள் சுரேஷ் மீது உரசியது. இத

னால், மயக்கமடைந்த சுரேஷை பொதுமக்கள், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் ஏற்கனவே சுரேஷ் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE