வாட்டிய குடும்ப வறுமை: 4 வயது மகளை ரூ.40,000க்கு விற்ற பிஹார் தம்பதி - ஒடிசாவில் குழந்தை மீட்பு

By KU BUREAU

புவனேஸ்வர்: குடும்ப வறுமை காரணமாக ஒடிசாவை சேர்ந்த தம்பதியினருக்கு, ரூ40,000க்கு தங்களின் 4 வயது மகளை பிஹார் தம்பதியினர் விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிஹாரைச் சேர்ந்த தம்பதியினர் வறுமை நிலை காரணமாக, தங்களின் 4 வயது பெண் குழந்தையை பிபிலியில் உள்ள ஒரு குழந்தை இல்லாத தம்பதியருக்கு ரூ.40 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர். குழந்தையை பெற்ற தம்பதிகள் படகடா காவல்நிலைய வரம்பின் கீழ் தினசரி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர் என்று படகடா காவல் நிலையப் பொறுப்பாளர் துருப்தி ரஞ்சன் நாயக் கூறினார்.

இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, படகடா போலீசார் அந்த குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். இதனையடுத்து குழந்தை விற்பனையில் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி பேசிய படகடா காவல் நிலைய ஐஐசி த்ருப்தி ரஞ்சன் நாயக், "பிஹார் தம்பதியினர், தங்களின் நான்கு வயது மகளை இப்பகுதியில் உள்ளோருக்கு விற்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி வழக்கு பதிவு செய்துள்ளோம். பிப்லி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு, ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். படகடா பகுதியைச் சேர்ந்த இரண்டு இடைத்தரகர்கள் இதற்கு உதவியது தெரியவந்துள்ளது” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE