தோகைமலை அருகே சூதாட்டம்: 40 பேர் கைது; 18 இரு சக்கர வாகனங்கள், ரூ.2.15 லட்சம் பறிமுதல்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ளது ஆர்ச்சம்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணம் வைத்து சூதாடுவதாக கரூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்ஐ பாலசுப்ரமணியன் ஆகியோர் புதன்கிழமை (நவ. 27ம் தேதி) திடீர் சோதனை மேற்கொண்டதில் அப்பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர், மேலும் 18 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு சொகுசு கார், 35-க்கும் மேற்பட்ட செல்போன்கள், ரூ.2,15,580 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS