சென்னை | லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்​பறி செய்த 2 பேர் கைது

By KU BUREAU

சென்னை: லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்​பறி​யில் ஈடுபட்​டதாக இருவரை அண்ணாசாலை போலீ​ஸார் கைது செய்​தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்​பகோணம், திரு​விடை மருதூர் பகுதி​யைச் சேர்ந்​தவர் லாரி ஓட்டுநர் கணேஷ் (30). இவர் கடந்த 24-ம் தேதி லாரி​யில் சரக்​குகளை ஏற்றி கொண்டு, சென்னை, கோபாலபுரம் பகுதி​யில் உள்ள குடோன் அருகே லாரியை நிறுத்​தி​விட்டு, சத்யம் திரையரங்கம் அருகே​யுள்ள டீக் ​கடையில் டீ குடிக்க சென்​றார்.

அப்போது, அங்கு வந்த 2 பேர் கணேஷிடம் பேச்சு கொடுத்​தனர். திடீரென கத்தி முனை​யில் மிரட்டி அருகில் மறைவான இடத்​துக்கு அழைத்து சென்று பணம், செல்​போனை கேட்​டனர். அவர் கொடுக்க மறுப்பு தெரி​வித்​த​தால் தலையில் கட்டை, பீர் பாட்​டிலால் சரமாரியாக தாக்கி விட்டு கணேஷிட​மிருந்த செல்​போன் மற்றும் வெள்​ளிச் செயினை பறித்து தப்பினர். பலத்த காயம் அடைந்த கணேஷ் சிகிச்​சைக்கு பின்னர் அண்ணாசாலை காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்டமாக அப்பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளை கைப்​பற்றி அதன் அடிப்​படை​யில் போலீ​ார் துப்பு துலக்​கினர். இதில், கணேஷை தாக்கி, வழிப்​பறி​யில் ஈடுபட்டது அண்ணாசாலை​யைச் சேர்ந்த விஜய்​பிரபு (27), ஆயிரம் விளக்கு ரங்கன் தெரு​வை சேர்ந்த டேவிட் என்ற வினோத் (32) என்பது தெரிந்​தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இரு​வரை​யும் ​போலீ​ஸார் நேற்று ​முன்​தினம் கைது செய்​தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE