ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் லிவ்-இன் ரிலேஷனில் இருந்த பெண், அவரது காதலரால் கொலை செய்யப்பட்டு காட்டில் புதைக்கப்பட்டார். 10 மாதங்களுக்குப் பிறகு அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் சீமா பாண்டோ எனும் பெண், தனது காதலன் சந்திரிகா பிரசாத் ராஜ்வாடேவுடன் அவர்களது கிராமத்தில் ஒன்றாக வசித்து வந்தார். அவர் திடீரென காணாமல் போனதையடுத்து அவரது தந்தை போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக கட்கவான் போலீஸார் விசாரணை தொடங்கினார்.
போலீஸார் சந்திரிகா பிரசாத் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தகாத உறவு சந்தேகத்தின் பேரில், சீமாவை கொன்று, அவரது உடலை 10 மாதங்களுக்கு முன்பு அருகிலுள்ள காட்டில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்ய மீட்கப்பட்ட எலும்புக்கூட்டை பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மர்மத்தின் மற்றொரு சம்பவமாக, மகள்காணாமல் போனதாக புகார் செய்த சீமாவின் தந்தை சோர் லால் பாண்டோவும் கடந்த ஏழு மாதங்களாக காணவில்லை. இது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
» ‘கங்குவா’ தோல்வி: கோயிலில் யாகம் நடத்திய சூர்யா- ஜோதிகா?
» மானாமதுரை அருகே கண்மாய் உடைப்பு: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்