புதுச்சேரி: இரண்டாவது கணவரின் நடவடிக்கை சரியில்லாமல் பிரிந்த மனைவியை அவருடன் தனிமையில் இருந்தபோது எடுத்த அந்தரங்க வீடியோ, போட்டோக்களை உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாண்டியனை (30) சைபர் கிரைம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காஞ்சனா என்பவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் தனது அந்தரங்க புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக தனக்கும் தன் உறவினர்களுக்கு எல்லாம் அனுப்பி தான் சொல்லும் இடத்திற்கு தனிமையில் வர வேண்டுமென மிரட்டுகிறார் என்றும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் சைபர் கிரைம் போலீஸில் புகார் தந்தார்.
அவர் கொடுத்த புகார் அடிப்படையில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஐடி எந்த ஊரில் இருந்து இயங்குகிறது என்பதை கண்டறிந்த சைபர் கிரைம் போலீஸார் மேலும் அது எந்த செல்போன் மூலமாக செயல்படுகிறது என்பதையும் கண்டுபிடித்தனர். திண்டிவனம் அருகே சென்று சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான ஐஆர்பிஎன் ஏஎஸ்ஐ சுதாகர், போலீஸார் அருண், அபிநயா ஆகியோர் பாண்டியன் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணை தொடர்பாக போலீஸார் கூறியதாவது: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாண்டியனுக்கும், புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த காஞ்சனாவுக்கும் 2வது திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகுதான் பாண்டியனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதையடுத்து பாண்டியனிடம் இருந்து காஞ்சனா பிரிந்தார். இதனையடுத்து காஞ்சனாவிடம் தன்னுடம் சேர்ந்து வாழுமாறு அழைத்துள்ளார் பாண்டியன்.
» மதுரையில் 31 ஏக்கர் அரசு நில மோசடியை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் தடை
» ஸ்டாலின் Vs அன்புமணி + அண்ணாமலை முதல் சிஎஸ்கே வசமான வீரர்கள் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
அவர் வர மறுத்ததால் காஞ்சனாவுடன் எடுத்த அந்தரங்க புகைப்படங்களை அவரது உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரை கைது செய்து, அவரிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம்” இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.