சென்னை | தலைமை செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு

By KU BUREAU

சென்னை: தலை​மை செயலக பெண் அதிகாரி வீட்​டில் நகை மாயமானது குறித்து வேளச்​சேரி போலீ​ஸார் விசாரணை மேற்​கொண்​டுள்​ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: சென்னை வேளச்​சேரி விஜிபி செல்வா நகர் பகுதி​யை சேர்ந்​தவர் கவுசல்​யா (43). தலைமைச் செயல​கத்​தில் உயர் கல்வித் துறை​யில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது கணவர் நாவலூரில் உள்ள தனியார் பள்ளி​யில் பணியாற்றுகிறார். இவர்​களது குழந்​தையை கவனித்​துக் கொள்ள தனியார் ஏஜென்சி மூலம் பிரேமா பிரெசினா என்ற பெண் கடந்த ஜனவரி 1-ம் தேதி வேலைக்கு சேர்ந்​தார்.

செப்​டம்பர் 1-ம் தேதி வரை அவர் வேலை பார்த்​துள்ளார். பின்னர், கணவரின் உடல்​நிலையை காரணம் காட்டி அவர் வேலையை விட்டு நின்​றுள்​ளார். இதையடுத்து மறுநாள் சரஸ்வதி என்பவர் வேலை​யில் சேர்ந்து குழந்​தையை கவனித்து வந்தவர் அவரும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்​தில் வேலை​யை​விட்டு நின்​றுள்​ளார். இதையடுத்து நளினி என்ற பெண் வேலைக்கு சேர்ந்து பணிப் பெண்ணாக கவுசல்யா வீட்​டில் பணி செய்து வருகிறார்.

இந்நிலை​யில் கவுசல்யா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்​வதற்​காக, பீரோ​வில் இருந்த நகைகளை அண்மை​யில் எடுத்து பார்த்த​போது அதில் 17 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரிய​வந்​தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேளச்​சேரி காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​பேரில், கவுசல்யா வீட்​டில் தற்போது பணி செய்த மற்றும் ​முன்பு பணி செய்த பணிப் பெண்​களிடம் ​போலீ​ஸார் ​விசாரணை மேற்​கொண்​டுள்​ளனர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE