சென்னை | ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

By KU BUREAU

சென்னை: தேனாம்​பேட்டை எல்டாம்ஸ் சாலை​யில் தனியாருக்கு சொந்​தமான வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று மாலை இந்த ஏடிஎம்​-க்கு வந்த இருவர், ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்​டம்​விட்டு, சுத்​தி​யலால், ஏடிஎம் இயந்​திரத்தை உடைத்து அதற்​குள் இருந்த பணத்தை கொள்​ளை​யடிக்க முயன்​றனர்.

சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற​வர்​கள், ஏடிஎம் மையத்​துக்​குள் பார்த்தனர். தப்பி ஓட முயன்​றவர்களை விரட்​டிச் சென்ற பொது​மக்​கள், கொள்​ளை​யர்​களில் ஒருவரை பிடித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்​தில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தலைமறைவானார்.

போலீஸ் விசா​ரணை​யில் பிடிபட்டது சென்னை மந்தை வெளியை சேர்ந்த கார்த்திக் (35) என்பது தெரிந்​தது. அவரை கைது செய்த போலீ​ஸார், தப்பியோடிய அவரது கூட்​டாளியான அதேபகு​தி​யைச் சேர்ந்த சின்னா (35) என்பவரை தேடி வருகின்​றனர். கொள்​ளை​யர்கள் இருவரும் மதுபோதை​யில் இருந்​ததாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE