சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்

By KU BUREAU

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் கோண்டாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
பெஜ்ஜி பகுதியில் இன்று அதிகாலையில் என்கவுன்டர் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சவான் உறுதி செய்தார்.

ஒடிசா வழியாக சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நுழைவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் கோண்டா மாவட்டத்தின் பெஜ்ஜி பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்த நடவடிக்கையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டர் நடவடிக்கையில், மாவோயிஸ்டுகளிடமிருந்து மூன்று தானியங்கி துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களை மீட்கப்பட்டது.

பஸ்தார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி சுந்தர்ராஜ், இந்த என்கவுன்டரை உறுதி செய்துள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

கடந்த மாதம், சத்தீஸ்கரில் உள்ள நாராயண்பூர்-தந்தேவாடா எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏகே சீரிஸ் மற்றும் பிற ஆயுதங்கள் உட்பட பல தாக்குதல் துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE