ஓசூர்: கெலமங்கலம் அருகே கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் நட்ராஜ் (33). இவரது மனைவி அபிராமி (25) இவர்களது ஒன்றரை வயது மகன் சோம்குகன் மற்றும் உறவினர்கள் கவிதா (43) பிரபாகரன் (24) ஆகியோர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு காரில் சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு நேக்கி கார் சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை கெலமங்கம் பி.செட்டிப்பள்ளி அருகே சென்றபோது எதிரே எம்.செண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கவிதா மற்றும் குழந்தை சோம் குகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நட்ராஜ். அபிராமி, பிரபாகரன் ஆகிய மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த கெலமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான டிப்பர் லாரி ஓட்டுனரை போலீஸார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
» நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய தம்பதியர் சிறையிலடைப்பு!
» கோவைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.1.7 லட்சம் மதிப்பிலான சிகரெட் பறிமுதல்