கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் பெண் வழக்கறிஞரும் அவரது கணவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவருக்கும், பயிற்சி வழக்கறிஞரான ஆனந்தகுமாருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் வந்த போது, அங்கு ஆனந்தகுமார் வழக்கறிஞர் கண்ணனை கழுத்து, தோள் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டிய நிலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் வழக்கறிஞர் கண்ணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு ஆனந்த குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறிவித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட கண்ணனுக்கும், ஆனந்தகுமாரின் மனைவியான வழக்கறிஞர் சத்யாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. தொடர்ந்து கண்ணன் தகராறு செய்ததால் ஆனந்தகுமார் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவம் தொடர்பாக ஆனந்தகுமார், சத்யாவதி தம்பதியர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனந்தன் கோர்ட்டில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்த போலீஸார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
» லஞ்ச புகார் எதிரொலி: அதானி நிறுவன பங்குகள் கடும் சரிவு
» வகுப்பறையில் ஆசிரியர் ரமணி படுகொலை: பள்ளிக் கல்வித் துறையை சாடுவது சரியா?