ஓசூர் நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞரை கொல்ல முயன்றவர் கைது

By KU BUREAU

ஓசூர்: நீதி​மன்ற நுழைவாயி​லில் வழக்​கறிஞரை அரிவாளால் வெட்​டிக் கொலை செய்ய முயன்றவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்​தெரு​வைச் சேர்ந்​தவர் வழக்​கறிஞர் கண்ணன் (30). இவர் ஓசூரில் உள்ள மூத்த வழக்​கறிஞரிடம் உதவி​யாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலை​யில், நேற்று மதியம் இவர் நீதி​மன்ற நுழைவா​யில் அருகே நடந்து சென்​ற​போது, அவரை பின்​தொடர்ந்து வந்தவர் அரிவாளால் வெட்​டி​னார். இதில் பலத்த காயமடைந்த கண்ணன் மயங்கி விழுந்​தார். அங்கிருந்​தவர்கள் அவரை மீட்டு, ஓசூர் தனியார் மருத்​துவ​மனை​யில் சேர்த்​தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. இதனிடையே, கண்ணனை அரிவாளால் வெட்​டியவர் ஓசூர் ஜுடீசியல் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் (எண்.2) சரணடைந்​தார். இதையடுத்து, அவரை ஓசூர் நகர போலீ​ஸார் கைதுசெய்​தனர்.

தவறான நட்பு காரணமா?- விசா​ரணை​யில், கண்ணனை அரிவாளால் வெட்​டியவர் ஓசூரைச் சேர்ந்த ஆனந்​தகு​மார் (38) என்பதும், இவர் வழக்​கறிஞர் ஒருவரிடம் குமாஸ்​தாவாகப் பணிபுரிந்து வருவதும் தெரிந்​தது. வழக்​கறிஞரான இவரது மனைவிக்​கும், கண்ணனுக்​கும் தவறான நட்பு இருந்​துள்ளது. இதை ஆனந்​தகு​மார் கண்டித்த நிலையில், இருவரும் நட்பைத் தொடர்ந்​துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஆனந்​தகு​மார், கண்ணனை அரிவாளால் வெட்​டியது தெரிய​வந்​தது. அவரிடம் போலீ​ஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்​றனர்.

வைரலான வீடியோ... இதற்​கிடை​யில், வழக்​கறிஞர் தாக்​கப்​பட்​டதைக் கண்டித்து, ஓசூர் நீதி​மன்ற வளாகத்​தில் வழக்​கறிஞர்கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட்​டனர். தகவலறிந்து வந்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் போலீஸார், ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட்ட வழக்​கறிஞர்களை சமாதானப்​படுத்தினர். நீதிமன்ற நுழைவாயி​லில் வழக்​கறிஞரை அரிவாளால் வெட்டும் வீடியோ காட்சி சமூக வலை தளங்​களில் வைராலாகி பரபரப்பை ஏற்படுத்​தி​யுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE