பள்ளிக்கு தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர்: ஆந்திராவில் அதிர்ச்சி

By KU BUREAU

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், காலையில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் அறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியான கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காலையில் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா அறுத்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறையால் காலை பள்ளிக்கு தாமதமாக வந்த 18 மாணவர்களின் தலைமுடியை அவர் வெட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், ஆசிரியர் சாய் பிரசன்னா நான்கு மாணவர்களை உடல் ரீதியாக தாக்கி, அவர்களை வெயிலில் நிற்க வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் அவர் மிரட்டியுள்ளார். இருப்பினும், மாணவிகள் இதுபற்றி பெற்றோரிடம் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக சாய் பிரசன்னா தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE