ராமேசுவரம்: கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து சரக்கு வாகன ஓட்டுநர் உயிரிழப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேஸ்வரம்: ராமேசுவரத்தில் கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து சரக்கு வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.

ராமேசுவரத்தில் நேற்று ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவரை வரவேற்பதற்காக ராமேசுவரத்தின் பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டும், திமுக கொடிக் கம்பங்களும் நடப்பட்டிருந்தன.

நேற்று இரவு ராமேசுவரம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கோபி (31) என்பவர் வேர்க்கோடு பகுதியில் தனது சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்ற போது கொடிக் கம்பத்தில் மோதி உள்ளார்.

உடனே கோபி கதவை திறந்து சரக்கு வாகனத்தை விட்டு வெளியே வந்தபோது, கொடிக் கம்பம் அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் மீது பட்டு, கோபி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE