அரசுப் பள்ளி வளாகத்தில் எரிந்த நிலையில் இளைஞர் சடலம் - சென்னை போலீஸ் விசாரணை

By KU BUREAU

சென்னை: அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞர் ஒருவர் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எரித்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தங்கும் விடுதியும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு விடுதி மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வளாகத்துக்குள் அலறல் சத்தம் கேட்டது. இதைக் கேட்டு கண் விழித்த மாணவர்கள், வெளியே வந்து பார்த்தபோது அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றப்பட்டு தீப்பற்றிய நிலையில் விழுந்துகிடந்தார்.

இதுகுறித்து உடனடியாக அசோக்நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, இளைஞர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீப்பற்றிய நிலையில் சடலமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை யாரேனும் அவரை எரித்து கொன்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE