போலீஸ் வாகனத்தில் மது அருந்திய சிறப்பு எஸ்.ஐ பணியிடை நீக்கம்

By KU BUREAU

சென்னை: போலீஸ் வாகனத்தில் மது அருந்திய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை போலீஸார் சிலர், கடந்த வாரம் கைதிகளை சிறையிலிருந்து நீதிமன்றம்அழைத்து வந்து பின்னர், சிறைக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.

திரும்பி வரும்போது ஆயுதப்படை காவலர்களில் சீருடை அணியாத காவலர் ஒருவர், காவல் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலானது.

காவல் வாகனத்திலேயே மது அருந்திய சம்பவம் அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்த சென்னை காவல் ஆணையர் அருண், இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி ஆயுதப்படை பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காவல் வாகனத்தில் மது அருந்தியது பரங்கிமலை ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட் டார். மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான லிங்கேஸ்வரனின் இதற்கு முந்தைய செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தர விடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE