மதுரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு சாகும் வரை சிறை

By கி.மகாராஜன்

மதுரை: மதுரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது.

மதுரை முத்துப்பட்டி கண்மாய் கரையை சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10.9.2022-ல் பெற்றோர் வேலைக்கு சென்றதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (64) சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக திலகர் திடல் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

இந்த வழக்கை மதுரை போக்சோ நீதிமன்ற நீதிபதி முத்து குமார வேல் விசாரித்தார். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜான்சிராணி வாதிட்டார். விசாரணை முடிந்த நிலையில், முருகேசனுக்கு சாகும் வரை சிறை தண்டனை மற்றும் ரூ 11 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE