மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை: 11 குக்கி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By KU BUREAU

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 11 குக்கி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அசாமின் எல்லையோரத்தில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

இந்த தீவிரவாதிகள் ஜிரிபாமில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது இரு புறமிருந்தும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு படையினரின் என்கவுன்டர் தொடங்கியது என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், காவல் நிலையத்தை ஒட்டி மாநிலத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண முகாம் உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இந்த முகாமையும் குறிவைத்து தாக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஜிரிபாமின் போரோபெக்ராவில் உள்ள இந்த காவல் நிலையம் சமீபத்திய மாதங்களில் பல முறை குறிவைக்கப்பட்டது. காவல்நிலையத்தைத் தாக்கிய பின்னர், குக்கி தீவிரவாதிகள் ஜகுரடோர் கரோங்கில் ஒரு சிறிய குடியிருப்பு பகுதியை நோக்கிச்சென்று வீடுகளுக்கு தீ வைக்கத் தொடங்கினர். அவர்கள் ஒரே நேரத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE