இலவசமாக பெட்ரோல் போடுமாறு தகராறில் ஈடுபட்டவர் கைது - மப்பேடு போலீஸார் நடவடிக்கை

By KU BUREAU

திருவள்ளூர்: பேரம்பாக்கம் அருகே பெட்ரோல் பங்க்கில் இலவசமாக பெட்ரோல் போடுமாறு தகராறில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தை அடுத்த சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் அப்பா துரையின் மகன் அபியூத் (24). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அபியூத் பேரம்பாக்கத்தில் உள்ள திவாகர் சுயம் பிரகாஷ் என்பவரது பெட்ரோல் பங்க்கில் இலவசமாக பெட்ரோல் போட வேண்டும் என பணியில் இருந்த ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

இதனை கண்ட பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் திவாகர் சுயம் பிரகாஷ் தட்டிக் கேட்ட போது அவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

நிலுவையில் 5 வழக்குகள்: இது குறித்து திவாகர் சுயம் பிரகாஷ் மப்பேடு போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அபியூத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில் அபியூத் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE