மதுரை: மதுரையில் பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய தனியார் கோயில் பூசாரி சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளி தம்பதியரின் 17 வயது மகள் பிபி.குளம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. எனவே, மதுரை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் தனது மகளை நேற்று அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் சுமார் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீஸார் விசாரித்தபோது, கண்ணனேந்தல் பகுதியிலுள்ள தனியார் கோயில் நிர்வாகி (பூசாரி) ஒருவரே காரணம் என கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து போலீஸார் அவரை பிடித்து விசாரிக்கின்றனர். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியின் தயார் அந்த பூசாமி மீது புகார் அளித்துள்ளார்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், "மாணவியின் வறுமையை பயன்படுத்தி படிப்புக்கு பண உதவி செய்வதாக கூறி, மாணவியை கோயிலுக்கு அந்த நிர்வாகி அழைத்துள்ளார். விடுமுறை நாட்களில் கோயிலுக்குச் சென்ற மாணவியை கோயிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணியை செய்ய வைத்திருக்கிறார்.
» தளி அருகே இருசக்கர வாகன விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
» கோவை விமான நிலையத்துக்கு 6 நாட்களில் 10 வெடிகுண்டு மிரட்டல்கள்!
இவ்வாய்ப்பை பயன்படுத்தி பூசாரி மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதால் கர்ப்பிணியாகி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. 48 வயதான அந்த நிர்வாகி மேலும், சில மாணவிகள், பெண்களிடமும் சில்மிஷம் செய்திருப்பதும் தெரிகிறது. விசாரணை முடிவில் ‘போக்சோ ’சட்டத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது" என்றனர்.