தளி அருகே இருசக்கர வாகன விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

By எஸ்.விஜயகுமார்

ஓசூர்: தளி அருகே இருசக்கர வாகனத்தில் கோயிலுக்குச் செல்லும் போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஜோகட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜ் (45). இவரது மனைவி ரத்தினம்மா (35). இவர்களது மகன் நவீன் (13). இவர்கள் மூவரும் இன்று மதியம் தளி அருகே உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது தளி - காடுகெம்பத்தப்பள்ளி சாலையில் வனப்பகுதி வழியாக செல்லும் போது, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.

அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்துவிட்டு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தளி போலீஸார் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பிரசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE