சட்டவிரோதமாக கைது செய்த நபருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்: காவல்துறை அதிகாரிக்கு உத்தரவு

By KU BUREAU

மும்பை: சட்டவிரோதமாக கைது செய்த நபருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரிக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமாக ஹிங்கோலி காவல் நிலையத்தில் தன்மீது தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய மனுவை நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் எஸ்ஜி சப்பல்கோங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ மற்றும் 66-பி பிரிவுகளின் கீழ் அவதூறு, அவதூறான விஷயங்களை அனுப்புதல் மற்றும் திருடப்பட்ட கணினியை நேர்மையற்ற முறையில் பெறுதல் அல்லது தக்கவைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் திருடப்பட்ட கணினியை வைத்திருப்பதற்கான குற்றச்சாட்டு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த பிரிவுகள் பொருந்தாத போதிலும், மனுதாரர் ஆகஸ்ட் 6, 2024 அன்று நள்ளிரவுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட மனுதாரர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதே நாளில் ஜாமீன் பெற்றார்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில், "கைது செய்வதற்கு முன்பு விசாரணை அதிகாரி தனது மனதைப் பயன்படுத்த மாட்டார் என்பதை கற்பனைகூட செய்யவில்லை. எந்தெந்த பிரிவுகள் பரிந்துரைக்கப்பட்டன, என்ன தண்டனை, இத்தகைய சூழ்நிலைகளில் அவரை சட்டப்பூர்வமாக கைது செய்ய முடியுமா என அவர் யோசிக்கவில்லை. ஒரு நபர் கைது செய்யப்பட்ட பிறகு, தவறான பிரிவை பரிந்துரைப்பது, ஒரு விசாரணை அதிகாரியின் தற்கொலை முயற்சியாகும். ஏனெனில் விசாரணை அதிகாரி கைது செய்யப்படுவதற்கு முன்பும், கைது செய்யும் நேரத்திலும் சட்டத்தை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்படும்போது, ​​மனுதாரரை கைது செய்வதற்கான காரணத்தை விசாரணை அதிகாரி வழங்கவில்லை என்றும், கைதுக்கான காரணங்கள் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம் விசாரணை அதிகாரி மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE