சென்னை | ஆட்டோ மோதி விபத்து: தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழப்பு

By KU BUREAU

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வர் (27). இவர் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகம் வந்து கொண்டிருந்தார்.

அசோக் நகர் காவல் நிலையம் அருகே உள்ள சிக்னலில் சென்றபோது, அதிவேகமாக வந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த புவனேஸ்வருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதேபோல், ஆட்டோவை ஓட்டி வந்த தி.நகர் பாரதி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதனுக்கு (34) காலில் காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு புவனேஸ்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிண்டி போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE