மேடையில் கோழியின் கழுத்தை அறுத்து, ரத்தம் குடித்த இசையமைப்பாளர்: போலீஸார் வழக்குப்பதிவு

By KU BUREAU

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசம் இடாநகரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது கோழியின் கழுத்தை அறுத்து, அதன் ரத்தத்தைக் குடித்த இசை கலைஞர் கோன் வை சன் மீது காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் உள்ள செப்பா பகுதியைச் சேர்ந்த கோன் வை சன், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இடாநகரில் அக்டோபர் 28ஆம் தேதி நடந்த கலைநிகழ்ச்சியின் போது கோழியைக் கொன்று அதன் ரத்தத்தை இசை கலைஞர் கோன் வை சன் குடித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கண்டனங்கள் குவிந்தன.

கோழியைக் கொன்று அதன் இரத்தத்தைக் குடித்ததைத் தொடர்ந்து பீடா அமைப்பு அவர் மீது புகார் அளித்தது. எனவே திங்கள்கிழமை இடாநகர் காவல்நிலையத்தில் கோன் வை சன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

கோன் வை சன் மீது பிஎன்எஸ் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (பிசிஏ) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE