மதுபான பார்ட்டிக்கு குறைவாக பணம் கொடுத்ததால் சண்டை: மாமாவை அடித்துக் கொன்ற மருமகன்

By KU BUREAU

மத்தியப் பிரதேசம்: ஜபல்பூரில் மதுபான பார்ட்டிக்கு குறைவாக பணம் கொடுத்ததால் ஏற்பட்ட சண்டையில் 26 வயது இளைஞரை 19 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்துள்ளார்.

தியோரி தபாரியா பகுதியைச் சேர்ந்த மனோஜ் தாக்கூர் கடந்த புதன்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் வீட்டுக்கு மீண்டும் திரும்பி வரவில்லை. பின்னர், அவரது சடலம் வயலில் காயங்களுடன் மீட்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், மனோஜ் கடைசியாக தனது மருமகன் தராம் தாக்கூருடன் சார்ஜவன் சந்தையில் இருந்தார் என்பது தெரியவந்தது. விசாரணையின் போது, ​​தராம் தனது மாமாவைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்

போலீஸாரின் விசாரணையின்படி, மாமா-மருமகன் இருவரும் சம்பவத்தன்று ரூ.340 மதிப்புள்ள ஆல்கஹால் மற்றும் ரூ. 60 க்கு கோழிக்கறி வாங்கி, சிறிய பார்ட்டிக்காக கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலுக்குச் சென்றனர். அப்போது தராம் குறைவான பங்கு தொகையை கொடுத்ததால் ஆத்திரமடைந்த மனோஜ், அவரை ஒரு மர குச்சியால் தாக்கினார். இதனால் கோபமடைந்த தராம், மனோஜை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் மனோஜ் உயிரிழந்தார்’ என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தராம் மீது பி.என்.எஸ் பிரிவு 103 (1) இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE