செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பம்மதுகுளம், காட்டுநாயக்கன் நகர், காந்தி தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (34). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி சரஸ்வதி (32), ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
சரஸ்வதி செங்குன்றம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மது அருந்தும் பழக்கம் கொண்ட கருணாகரன் அடிக்கடி மது போதையில் மனைவியிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த செப்.27-ம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த கருணாகரன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சரஸ்வதி வீட்டிலிருந்த சுத்தியலால் கருணாகரனின் தலையில் அடித்துள்ளார்.
இதில், படுகாயமடைந்த கருணாகரன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில், கடந்த மாதம் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, வழக்கு பதிவுசெய்த சோழவரம் போலீஸார், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த சரஸ்வதியை நேற்று முன்தினம் கைது செய்தனர்
» வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா, போதை ஊசி விற்ற 3 பேர் கைது
» இந்த வாரம் ’வேட்டையன்’ உட்பட ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இது தான்!