சிவகாசி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அருகே பித்துலுப்பட்டியில் தோட்டத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சிய 3 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் மது விலக்கு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பித்துலுப்பட்டியில் உள்ள சண்முககனி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மதுவிலக்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்த போது, கள்ளச்சாரயம் காய்ச்சியது தெரியவந்தது. சாராயம் காய்ச்சிய சாத்தூர் பகுதியை சேர்ந்த தோட்ட காவலாளி தங்கம் (59), பொன்பாண்டி, நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 1 லிட்டர் கள்ளச்சாராயம், ரூ.500 பணம் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரம், அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் அணைக்கரைபட்டியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE