திருப்பூர்: திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி, ரூ.25 லட்சத்துக்கு மேல் மோசடி செய்து தலைமறைவான நபரை போலீஸார் இன்று(அக். 29) கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் (42). இவர் திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவு ஜெய்ஸ்ரீ காம்ப்ளஸில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இதில் பல்வேறு வகையான ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் திருப்பூர் மாநகரை சேர்ந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர்.
50-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.25 லட்சத்துக்கு மேல் வசூல் செய்து, பணத்தை திருப்பிதராமல் ஏமாற்றி தலைமறைவாகிவிட்டது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் லட்சுமியிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, ராம்குமாரை இன்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.