மக்களிடம் அலட்சியம்: திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் 3 போலீஸார் ஆயுதப் படைக்கு மாற்றம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களில் அலட்சியம் காட்டியதாக கூறி, 3 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

திருப்பூர் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட தெற்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் தொடர்பாக, உரிய விசாரணை செய்யப்படாமல் இருப்பதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வரை புகார் சென்றது. இது தொடர்பாக அந்த காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் வரவேற்பரையில் மனுவை பெறும் போலீஸ் ஏட்டு சின்னச்சாமி, முதல் நிலை காவலர் மாதேஸ்வரன் ஆகியோர் பணியில் ஒழுங்கீனமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரையும் பணியிட மாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவிட்டார். அதேபோல் இது போன்ற விஷயங்களை கண்காணித்து காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டிய நுண்ணறிவு பிரிவு காவலர் நாகேந்திரன், திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்படதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE