கொல்கத்தா: அமைதிப்படுத்தும் மயக்க ஊசி செலுத்தி பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹஸ்னாபாத்தில் உள்ள மருத்துவரிடம் பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பெண்ணின் கணவர் வெளியூரில் பணிக்காக சென்று தங்கியிருந்துள்ளார். சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி, மருத்துவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த மருத்துவர், அப்பெண்ணை ஆபாசமாக படம்பிடித்து, அப்படங்களை வைரலாக்குவேன் என்று மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை தொடர்ந்து ப்ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வைரலாக்குவதாக சொல்லி அப்பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.4,00,000 பணமும் பறித்துள்ளார்.
ஆரம்பத்தில், தனது கணவன் வெளியூரில் இருந்ததால், பயத்தில் இதுகுறித்து அவர் யாரிடமும் தெரிவிக்க வில்லை. இருப்பினும், சமீபத்தில் அவரது கணவர் வீடு திரும்பியதும், அவரிடம் எல்லாவற்றையும் கூறினார். இதனையடுத்து அந்த மருத்துவரை கைது செய்யுமாறு அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், மருத்துவரை இன்று கைது செய்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்த கட்டமாக நீதித்துறை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
» உ.பியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்: தடியடி நடத்திய போலீஸார்; அதிர்ச்சி வீடியோ
» புதுச்சேரியில் நவ.4 முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அறிவிப்பு