தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 5 பேர் காயம்

By KU BUREAU

சாத்தூர்: விழுப்புரம் மாவட்டம், வி்க்கிரவாண்டி யில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு கோவில்பட்டி அருகில் உள்ள முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் சத்யா தலைமையில் 20 பேர் வேனில் சென்றுள்ளனர். மாநாடு முடிந்து நேற்று காலை இவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் - கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் தமிழ்நாடு ஹோட்டல் அருகே நேற்று பிற்பகல் வந்துகொண்டிருந்தபோது, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வேன் ஓட்டுநர் மாடசாமி உள்ளிட்ட 5 பேர் லேசான காயமடைந்தனர்.

அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE