ஓசூர்: ஓசூரை அடுத்த பாகலூர் அருகே எலுவப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 23-ம் தேதி அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாவட்டஅளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.
இதில், ஓசூரில் உள்ள அரசு உதவி பெறும்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டி நடந்த தனியார் பள்ளி ஆசிரியையின் கைக்கடிகாரத்தை அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவி எடுத்ததாக, அப்பள்ளியின்உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனிடம் சிலர் கூறினர். அதை அவர் மறுத்துள்ளார். அப்போது, அரசு உதவி பெறும் பள்ளி மாணவி ஒருவர் கைக் கடிகாரம் கீழே இருந்ததாகக் கூறி ஆசிரியையிடம் வழங்கினார்.
இதில், ஆத்திரமடைந்த தியாகராஜன், பேருந்து நிறுத்தத்தில் அந்த மாணவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, ஓசூர் பாகலூர்போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரை கைது செய்தனர். கல்வித் துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.