திண்டுக்கல்: மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (27). இவர் கடந்த 2021 ம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் வத்தலகுண்டு போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்தநிலையில் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.15 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.