புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

By கே.சுரேஷ்

புதுகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் களமாவூர் ஊராட்சி கண்ணகோன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள்கள் காயத்ரி (14), கவி ஸ்ரீ (4). இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து புறப்பட்டு நல்லிகுளத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது, கலக்குளம் வழியாக சென்று கொண்டிருந்த போது, அங்கு மண் அள்ளுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய இருந்த தண்ணீரில் இருவரும் மூழ்கினர்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், தண்ணீரில் மூழ்கிய காயத்ரி, கவி ஸ்ரீ ஆகிய இருவரையும் மீட்டு கீரனூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கீரனூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE