வழக்குகளை முடிக்காமல் வாய்தா வாங்கிய 8 காவல் ஆய்வாளர்களுக்கு அபராதம்

By KU BUREAU

சென்னை: சென்னை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 15-ம் தேதி வடபழனி, ராஜமங்கலம், சீரணி அரங்கம், திருவான்மியூர், வடக்கு கடற்கரை, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் காவல் நிலையங்கள் மற்றும் சிபிசிஐடி அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிடிவாரண்டை அமல்படுத்த கால அவகாசம் கோரினார். இதை ஏற்கமறுத்த நீதிபதி, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க காவல் ஆய்வாளர்கள் ஒத்துழைப்பதில்லை.

எனவே, இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 காவல் ஆய்வாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் நவ.25-ம் தேதிக்குள் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE