முன்னாள் மாவட்ட பதிவாளர், மனைவிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை

By KU BUREAU

சென்னை: தமிழக பத்திரப்பதிவு துறையில் பதிவாளராக பணியாற்றியவர் சந்திரசேகரன் (77). 1973-ல் சார்-பதிவாளராக பணியில் சேர்ந்த சந்திரசேகரன், 1991 முதல் சென்னை பதிவுத்துறை அலுவலக தணிக்கை பிரிவில் மாவட்ட பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

1991 ஜன.1 முதல் 2000 டிச.31 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.20.02 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி லதா மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2006-ல் வழக்குப்பதிவு செய்தனர்.

ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன்பு நடந்துவந்த விசாரணையில், போலீஸ் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார். இந்நிலையில், சந்திரசேகரன், லதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE