அரும்பாக்கம், அயனாவரத்தில் போதை பொருள் விற்ற தம்பதி உட்பட 6 பேர் கைது: போலீஸார் அதிரடி

By KU BUREAU

சென்னை: அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ரகசிய தகவலின்படி மாதவரம்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தீபக் (27) என்பவரை கைது செய்தனர்.

இவர் பிரிண்டிங் தொழில் செய்துகொண்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவருடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அவரது மனைவி டோலிமேத்தாவையும் கைது செய்தனர்.

இவரிடமிருந்து மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தீபக் அளித்ததகவலின் பேரில் அவரது நண்பர் வியாசர்பாடி முல்லை நகர் பகுதியைசேர்ந்த முத்துக்குமார் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவரும் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த ஜீனத் என்பவரிடம் ஒரு கிராம் ரூ. 2 ஆயிரத்துக்கு வாங்கி அதை ரூ.4 ஆயிரத்துக்கு தீபக் விற்பனை செய்து வந்துள்ளார். தன்னுடைய பிரிண்டிங் பிரசில் பணியாற்றும் முத்துக்குமாரை போதைப்பொருள் விற்பனை செய்ய பயன்படுத்தி உள்ளார். இதேபோல் அயனாவரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த பாலசண்முகம், அருண் லட்சுமணன், ரஞ்சித் ஆகிய மேலும்3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE