விபத்தில் சிக்கியவரின் உடல் உறுப்புகள் திருட்டு: தனியார் மருத்துவமனை மீது குடும்பத்தினர் புகார்

By KU BUREAU

ஒடிசா: விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகளை மருத்துவமனை திருடிவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் தலையில் காயம் இருந்தபோதிலும், வயிற்றில் அறுவை சிகிச்சைக்கான அடையாளங்கள் இருந்ததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்துள்ளனர்

பாபுலா டிகல் என்ற தொழிலதிபர், அக்டோபர் 13ஆம் தேதி, தனது மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் ராம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​இரும்புக் கம்பிகள் ஏற்றப்பட்ட மினி லாரி மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் 16 ஆம் தேதி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதன்பிறகு டிகலின் சடலத்தை குடும்பத்தினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

டிகலின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்த அடையாளங்களை குடும்பத்தினரின் கண்டறிந்தனர். மேலும், மருத்துவமனை நிர்வாகம் பிரேத பரிசோதனை செய்யாமல் டிகலின் உடலை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தது அவர்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியது. அதேபோல, டிகலின் மரணம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்திற்கும் மருத்துவமனை தகவல் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக குடும்பத்தினருக்கு உடலுறுப்புகள் திருட்டு குறித்து சந்தேகம் அதிகரித்தது.

ஆனாலும், அக்டோபர் 17 அன்று காந்தமால் மாவட்டம் பாலிகுடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திகரபாஜூவில் உள்ள சவக்குழியில் டிகலின் உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இதன்பின்னர் குடும்பத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து, ஒடிசா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், திகரபாஜூவில் உள்ள சவக்குழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட டிகலின் உடலைப் பிரேதப் பரிசோதனையும் செய்தனர்.

இதுகுறித்து பாலிகுடா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் சுஷாந்த் சாஹு கூறுகையில், "உடல் உறுப்பு திருடப்பட்டது குறித்து இறந்தவரின் மகனின் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அனைத்து விவரங்களும் தெரியவரும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE