போதை மாத்திரை விற்பனை செய்த சினிமா உதவி இயக்குநர் சென்னையில் கைது

By KU BUREAU

சென்னை: வடபழனி சரக உதவி ஆணையரின் தனிப்படை போலீஸாருக்கு, அசோக் நகர் பகுதியில் இளைஞர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை குறிவைத்து கும்பல் ஒன்று போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை போலீஸார் அசோக் நகரில் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். இதில், இளைஞர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைசெய்துவந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னணியில் அசோக் நகர், 92-வது தெருவில் வசித்து வரும் சினிமா உதவி இயக்குநர் தர்ஷன் (21) இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரை கே.கே.நகர் போலீஸார் அசோக் நகரில் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள், 29 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்பின்னணியில் இருக்கும் கும்பல்குறித்து தர்ஷனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE