தியாகதுருகத்தில் மூக்குத்திக்காக மூதாட்டிக் கொலையா? - போலீஸ் விசாரணை

By ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று கண்டெடுக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேருந்து நிலையப் பகுதியில் ரத்தவெள்ளத்தில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக தியாகதுருகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் அவ்விடத்தை ஆய்வு செய்து, பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதையடுத்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கொலையான பெண் தியாகதுருகம் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சேர்ந்த ரங்க நாயகி என்பதும் அவர் சற்று மனநல பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் அணிந்திருந்த மூக்குத்தியை திருடிக் கொண்டு, அவரை கல்லால் அடித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொலை செய்தவர் யார் என்பது குறித்தும், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE