போலி கையெழுத்திட்டு தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய தலைமைக் காவலர் கைது @ ஊமங்கலம்

By ந.முருகவேல்

கடலூர்: ஊமங்கலம் காவல் நிலையத்தில் என்எல்சியில் வேலை செய்வதற்கு தடையில்லாச் சான்றிதழ் பெற வந்த நபருக்கு உதவி ஆய்வாளரின் கையெழுத்தை தவறாகப் பயன்படுத்திய சுதாகர் என்ற தலைமைக் காவலர் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவரது செயலுக்கு உடந்தையாக இருந்ததாக இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அன்பழகன் என்பவர் பணியில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு எந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டது என புகார் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் புகாரின் அடிப்படையில் என்எல்சி அதிகாரிகள் அன்பழகனின், தடையில்லாச் சான்று வழங்கிய ஊமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து ஊமங்கலம் போலீஸார் நடத்திய விசாரணையில் அன்பழகனுக்கு வழங்கிய தடையில்லாச் சான்றிதழின் கையெழுத்து உதவி ஆய்வாளரின் கையெழுத்தில்லை எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, தொடர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உதவி ஆய்வாளரின் கையெழுத்தை காவல் நிலைய தலைமைக் காவலர் சுதாகர் முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதேபோன்று, அதே காவல் நிலைய எழுத்தர் ஜோசப் என்பவரும், வேறொரு நபருக்கு உதவி ஆய்வாளரின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகளை, காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் சங்குபாலரன் எஸ்பி அலுவலகத்திற்கு தெரிவிக்காமல் கடைமையில் இருந்த தவறியதாலும், 3 பேரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தலைமைக் காவலர் சுதாகர் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE