தேனி: தடை செய்யப்பட்ட ரூ.ரூ.1.47லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் தேனியில் பிடிபட்டது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி பெரியகுளம் சாலை கண் மருத்துவமனை அருகில் தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கூரியர் நிறுவனம் முன்பு நின்றிருந்த வேனை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை, கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் 181 கிலோ இருந்தன. இதன் மதிப்பு ரூ.1.47லட்சம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டுநர் பகவதிமுத்து (27), கடத்தலில் ஈடுபட்ட பெரியகுளம் தென்கரை வாகம்புலி தெருவைச் சேர்ந்த உமர்பாரூக் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். வாகனம் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக பெரியகுளத்தைச் சேர்ந்த வீரஅப்துல்லா (35) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.