சென்னை போலீஸாருக்கு ரகசிய தகவல்: போதைப் பொருள் மறைத்து வைத்திருந்த இருவர் கைது

By KU BUREAU

சென்னை: மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1.25 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் 7 ஊசிபோடும் சிரஞ்ஜிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல், D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் நேற்று மதியம், அண்ணா சாலை, சாந்தி திரையரங்கம் அருகில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருந்த நிஜாமுதீன், கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1.25 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் 7 ஊசிபோடும் சிரஞ்ஜிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், சென்னை பெருநகர காவல், H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று மதியம், வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரோடு மற்றும் தர்மராஜா கோயில் தெரு சந்திப்பு அருகே Tramapride 100 mg (Tramadol Hydrochloride Injection) என்ற ஊசி போடும் மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ml அளவுக்கொண்ட Tramapride 100 mg என்ற ஊசி போடும் மருந்துகள் -25, 6 ஊசி போடும் சிரஞ்ஜிகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பெண்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE