சென்னை: சென்னையில் ‘ரூட் தல’ விவகாரத்தில் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாநிலக் கல்லூரிக்கு அக்.14-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருத்தணியை அடுத்த பொன்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (19). மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் பி.ஏ. அரசியல் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த 4-ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லசென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அப்போது, ‘ரூட் தல’ பிரச்சினை தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மோதலில் ஈடுபட்டு,அவரை சரமாரியாக தாக்கியுள்ள னர். இதில் படுகாயம் அடைந்த சுந்தர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, தாக்குதல், கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளில் பெரியமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
» மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.10, 2024
» காஷ்மீர் சட்டப்பேரவைக்கு பாஜக உறுப்பினர்களை நியமிக்க கூடாது: உமர் அப்துல்லா வலியுறுத்தல்
இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர் நேற்றுகாலை உயிரிழந்தார். இதையடுத்து, இது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, மாணவர் உயிரிழந்த தகவல் அறிந்ததும், மாநிலக்கல்லூரி மாணவர்கள் 100 பேர் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில்ஈடுபட்டனர். சுந்தர் உயிரிழப்புக்கு கார ணமான மாணவர்களை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, மாநிலக் கல்லூரிக்கு அக்.14-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பச்சையப்பன் கல்லூரியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வேப்பேரி காவல் உதவி ஆணையர் கண்ணன் தலைமையில் சட்டம் - ஒழுங்கு போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மதுசூதன ரெட்டி தலைமை யில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெற்றோர் கண்ணீர்: உயிரிழந்த மாணவர் சுந்தரின் தந்தை ஆனந்தன், தாய் அமராவதி ஆகிய இருவரும் கூலி வேலைக்குசென்று வருகின்றனர். சுந்தருக்கு 2 சகோதரிகள். அதில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. ‘‘சுந்தர் படித்து பெரிய ஆளாகி, எங்களை நல்லபடியாக கவனித்துக் கொள்வான் என நினைத்தோம். ஆனால், எங்களை நிர்கதியாய் விட்டு சென்றுவிட்டான்’’ என்று பெற்றோர் கண்ணீருடன் கூறினர்.
உயிரிழந்த மாணவனின் சகோதரி கூறும்போது, ‘என் தம்பியை தாக்கும் வீடியோவை பார்த்தேன். அப்போது, நடைமேடையில் ஒருபோலீஸ்கூட இல்லையா. ஒருவர்அந்த இடத்துக்கு சென்றிருந்தால்கூட, என் தம்பியை விட்டுவிட்டு அங்கிருந்து அவர்கள் ஓடியிருப்பார்கள். என் தம்பியை அநியாயமாக அடித்து கொன்று விட்டார் கள்’’ என்றார்.
மாநில கல்லூரி மாணவர்கள் கூறும்போது, ‘அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சங்க தேர்தலைநடத்துவதுதான் ‘ரூட்’ தல பிரச்சினைக்கு தீர்வு. மாணவ தலைவர்கள்இருக்கும் போது, எந்த பிரச்சினையும் வராது.எனவே, அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டும்’’ என்றனர்.